காசநோய்ப் பாதிப்புகளை மதிப்பிடுவதற்கான இந்திய அளவிலான மாதிரி
April 14 , 2023 843 days 343 0
காசநோய்ப் பாதிப்புகளின் பரவலைக் கண்டறிவதற்காக அதிநவீனக் கணிதமுறை மாதிரியை உருவாக்கிய உலகின் முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது.
இது நோயின் இயல்பு சார்ந்த வரலாறு, தனிப்பட்ட நோய்த் தொற்றுப் பாதிப்புகள், உடல்நலம் பேணும் நடத்தை, தவறிய அல்லது முறையான நோயறிதல், சிகிச்சை வழங்கீடு மற்றும் விளைவு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின் படி, 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் காச நோய்ப் பாதிப்பு விகிதம் (10,000 நபர்களுக்கு) ஆனது 210 ஆக இருந்தது.
இந்தியக் கணிதமுறை மாதிரியைப் பயன்படுத்தி, இது 2022 ஆம் ஆண்டில் 196 ஆக உள்ளதாக மதிப்பிடப்பட்டது.
2021 ஆம் ஆண்டில் காசநோய்ப் பாதிப்புகளின் முழு எண்ணிக்கை 29.50 லட்சமாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
இந்திய மாதிரியானது, இது 2022 ஆம் ஆண்டில் 27.70 இலட்சம் என்று குறிப்பிட்டது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் காசநோய் இறப்பு விகிதம் (10,000 நபர்களுக்கு) 35 என மதிப்பிடப்பட்ட நிலையில் இது இந்திய மாதிரியின் படி 2022 ஆம் ஆண்டில் 23 ஆகக் குறைந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பானது, 2021 ஆம் ஆண்டில் காசநோய் இறப்புகளின் முழு எண்ணிக்கை 4.94 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
இந்திய மாதிரியானது, 2022 ஆம் ஆண்டில் இது 3.20 லட்சம் என குறிப்பிட்டது.
2022 ஆம் ஆண்டில், மொத்தம் 23,58,664 நோயாளிகள் மருந்து எதிர்ப்புத் திறன் கொண்ட காச நோயினால் (DSTB) பாதிக்கப் பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டனர்.
2022 ஆம் ஆண்டில், பதிவு செய்யப்பட்டப் பாதிப்புகளில், சிகிச்சைத் தொடக்க விகிதம் 95.5 சதவீதமாக இருந்தது.
இந்திய மாநிலங்களிலேயே அதிகப் பாதிப்புப் பதிவு விகிதம் டெல்லியில் பதிவாகி உள்ளது (ஒரு லட்சம் பேருக்கு 546).
இந்திய மாநிலங்களிலேயே மிகக் குறைவான பாதிப்பு கேரளா மாநிலத்தில் பதிவாகி உள்ளது (ஒரு லட்சம் பேருக்கு 67).