ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையானது (UNSC), அமெரிக்கா தயாரித்த ஒரு தீர்மானத்தின் மூலம் அதிபர் டிரம்பின் காசா அமைதித் திட்டத்தை அங்கீகரித்தது.
15 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் 13 வாக்குகள் ஆதரவாகவும், எந்தவொரு எதிரான வாக்குமின்றியும், சீனா மற்றும் ரஷ்யா வாக்களிக்காமலும் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காசா மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு விரிவான திட்டத்தை இந்தத் தீர்மானம் அங்கீகரித்தது.
இதில் போர் நிறுத்தம், பணயக் கைதிகள் - கைதிகள் பரிமாற்றம் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளை (IDF) பகுதியளவு திரும்பப் பெறுதல் ஆகியவை அடங்கும்.
இது இராணுவமயமாக்கல், இடைக்கால நிர்வாகம், புனரமைப்பு மற்றும் காசாவில் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை குறிப்பிட்டுக் காட்டியது.
இந்தத் தீர்மானம் ஆனது 2027 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை காசாவிற்கான தற்காலிக நிர்வாக அமைப்பாக அமைதி வாரியத்தை (BoP) நிறுவியுள்ளது.
எல்லைகளைப் பாதுகாக்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும், ஆயுதக் குழுக்களின் ஆயுத நீக்கத்தினை ஆதரிக்கவும் சர்வதேச நிலைப்படுத்தல் படையை (ISF) இது அங்கீகரித்தது.