TNPSC Thervupettagam

காசாவிற்கான 'அமைதி வாரியம்'

January 26 , 2026 14 hrs 0 min 22 0
  • டாவோஸில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான "அமைதி வாரியம்" சாசன அறிவிப்பை இந்தியா புறக்கணித்தது.
  • இந்த அமைதி வாரியம் டிரம்ப் நிர்வாகத்தின் காசா அமைதி திட்டத்தின் 2 ஆம் கட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • இது காசா பகுதியில் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி, புனரமைப்பு ஆகியவற்றை மேற்பார்வையிடுவதற்கானதாகும்.
  • இந்த வாரியம் அதன் முன்னேற்றம் குறித்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு சபைக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
  • ஒரு தலைவராக, டிரம்ப் சாசனத்தின் விளக்கத்தில் இறுதி நிலை முடிவெடுப்பு அதிகாரியாக விளங்குகிறார் மற்றும் உறுப்பினர் நீக்கம் மற்றும் நிர்வாகக் குழுவின் நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய முடிவுகளில் வீட்டோ அதிகாரத்தை கொண்டு உள்ளார்.
  • உறுப்பினர் நாடுகள் வாரியத்தின் செயல்பாடுகளுக்கு நிதியளிக்கவும் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து பெறவும் தலா 1 பில்லியன் டாலர் செலுத்தாவிட்டால், அவை மூன்று ஆண்டு காலத்திற்கு மட்டுமே உறுப்பினராக இருக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்