TNPSC Thervupettagam

காசிரங்கா ESZ குறைப்பு

August 16 , 2026 3 days 39 0
  • உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு இணங்க, காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தை (KNPTR) சுற்றியுள்ள சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை (Eco-Sensitive Zone - ESZ) 10 கிலோ மீட்டரிலிருந்து 1 கிலோ மீட்டராகக் குறைக்க அசாம் அரசு திட்டமிட்டுள்ளது.
  • பாதுகாக்கப்பட்ட காடுகள், தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களைச் சுற்றி குறைந்தபட்சம் 1 கி.மீ சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் அறிவிக்கப்பட வேண்டும் என்று 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
  • 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவில் திருத்தம் செய்து, ஒரே மாதிரியான 1 கி.மீ விதி உள்ளூர் நடவடிக்கைகளை பாதிக்கலாம் மற்றும் மனித-வனவிலங்கு மோதலை அதிகரிக்கலாம் என்று கூறியது, ஆனால் பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 1 கி.மீ தூரத்திற்குள் சுரங்கப் பணிகளுக்கு தடை நீடிக்கிறது.
  • முன்மொழியப்பட்ட குறைப்பு, கட்டுமானத் திட்டங்கள் உட்பட காசிரங்காவைச் சுற்றியுள்ள மேம்பாட்டுப் பணிகளை எளிதாக்கும் நோக்கம் கொண்டது.
  • காசிரங்கா தேசியப் பூங்கா ஒரு யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாகும், மேலும் இது அழிந்து வரும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தின் முக்கிய வாழ்விடமாகும்.
  • சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை 1 கி.மீ ஆகக் குறைப்பது தொடர்பான முன்மொழிவை மத்திய அரசுக்கு அசாம் அரசு அனுப்பவுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்