TNPSC Thervupettagam

காசிரங்காவில் மஞ்சள்நிறத் தொண்டை கொண்ட கரும்வெருகு

June 5 , 2026 11 days 116 0
  • அஸ்ஸாமின் காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் முதன் முறையாக மஞ்சள்நிறத் தொண்டை கொண்ட கரும்வெருகு (மார்டெஸ் ஃபிளாவிக்குலா) பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • மஞ்சள்நிறத் தொண்டை கொண்ட கரும்வெருகு என்பது மஸ்டெலிடே குடும்பத்தைச் சேர்ந்த பகல்நேரம் இயங்கும், மரம் ஏறும் பாலூட்டியாகும்.
  • ஓர் இடைநிலை வேட்டையாடியான இது உணவுச் சங்கிலியில் முதன்மை வேட்டையாடிகளுக்கு கீழே உள்ள நடுத்தர அளவிலான மாமிச உண்ணி ஆகும்.
  • இந்த இனம் இமயமலைப் பகுதி மற்றும் அஸ்ஸாம் உட்பட வடகிழக்கு இந்தியா முழுவதும் காணப்படுகிறது.
  • இது விதை பரவலுக்கு உதவுவதன் மூலம் காடுகளின் மீளுருவாக்கத்திற்கு ஆதரவு அளிக்கும் முக்கிய சுற்றுச்சூழல் பங்கைக் கொண்டுள்ளது.
  • இது வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இன் அட்டவணை II-இன் கீழ் பாதுகாக்கப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்