14வது தலாய் லாமா "தலாய் லாமாவின் அமைப்பு தொடரும்" என்றும், காடன் ஃபோட்ராங் அறக்கட்டளையே "எதிர்கால அவதாரங்களை அங்கீகரிப்பதற்கான ஒரே அதிகாரம்" கொண்டதாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
காடன் ஃபோட்ராங் என்ற சொல் லாசாவில் உள்ள டிரெபங் மடாலயத்தில் இரண்டாவது தலாய் லாமாவிலிருந்து தொடங்கிய தலாய் லாமா பரம்பரையின் தங்குமிடத்தைக் குறிக்கிறது.
பொட்டாலா அரண்மனையானது கட்டப்பட்ட பிறகு (ஐந்தாவது தலாய் லாமாவின் ஆணையின் படி), தலாய் லாமாக்கள் இந்த இடங்களிலிருந்து விலகிச் சென்றனர்.
தலாய் லாமாக்கள் குளிர்காலத்தில் இந்த பொட்டாலா அரண்மனையிலும், கோடை காலத்தில் நோர்புலிங்காவிலும் (பொட்டாலாவுக்கு சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஏழாவது தலாய் லாமாவால் கட்டப்பட்டது) தங்கினர்.
1959 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 14வது தலாய் லாமா லாசாவிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச்வரும் வரை இந்தப் பாரம்பரியம் பின்பற்றப்பட்டது.
சூரிச்சில் பதிவு செய்யப்பட்ட காடன் போட்ராங் அறக்கட்டளை, தலாய் லாமாவுடன் தொடர்புடைய மூன்று நிறுவனங்களில் ஒன்றாகும்.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பான காடன் போட்ராங் அறக்கட்டளை மற்றும் மற்றொரு இலாப நோக்கமற்ற அமைப்பான தலாய் லாமா அறக்கட்டளை ஆகியவை மற்ற இரண்டு அமைப்புகளாகும்.