காடம்பாறை நீரேற்று மின் நிலையமானது, மீளக்கூடிய இருவழிச் சுழலிகளைக் கொண்ட தமிழ்நாட்டின் ஒரே நீரேற்று மின் நிலையமாகும்.
பழமையான உபகரணங்கள் மற்றும் தொடர்ச்சியான பழுதுகள் காரணமாக இந்த மின் நிலையம் தற்போது அதன் மொத்தத் திறனில் 25% மட்டுமே இயங்குகிறது.
1987 ஆம் ஆண்டில் செயல்பாட்டிற்கு வந்த இந்த மின் நிலையம் தமிழ்நாட்டின் முதல் நீரேற்று நீர்மின் திட்டமாகும்.
இது மின்னேற்றி முறை மற்றும் மோட்டார் (விசையியக்கக் குழாய்) முறை ஆகிய இரண்டிலும் செயல்படக்கூடியது.
இந்த நிலையம் தலா 100 மெகாவாட் (MW) திறன் கொண்ட நான்கு அலகுகளுடன், மொத்தம் 400 மெகாவாட் நிறுவு திறனைக் கொண்டுள்ளது ஆனால் தற்போது ஒரு அலகு மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்கிறது என்ற நிலையில் மற்ற மூன்றும் பழுது பார்க்கும் பணியில் உள்ளன.
சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம் உபரியாக இருக்கும் காலங்களில், இந்த மின் நிலையம் கீழாழியாறு அணையிலிருந்து காடம்பாறை அணைக்குத் தண்ணீரை இறைத்து, எதிர்காலப் பயன்பாட்டிற்காக ஆற்றலைச் சேமிக்கிறது.