TNPSC Thervupettagam

காடர் பழங்குடியினர்

November 9 , 2021 1383 days 673 0
  • காடர் பழங்குடியினத்தைச் சேர்ந்த சில குடும்பங்கள் ஆனைமலைப் புலிகள் காப்பகத்தின் உள்பகுதியில் வீட்டுமனைக்கான பட்டாக்களைப் பெற்றுள்ளனர்.
  • காடர் என்பவர்கள் தமிழகத்திலுள்ள கோயம்புத்தூர் மற்றும் கேரளாவிலுள்ள கொச்சின் ஆகியவற்றுக்கு இடையிலான மலைப்பாங்கான எல்லைப்பகுதியினூடே வாழும் தென்னிந்தியாவின் ஒரு சிறிய பழங்குடி இனமாகும்.
  • கேரள மாநிலத்தின் 5 பழமையான பழங்குடிகளுள் ஒன்றான காடர் இனமானது அந்த மாநிலத்தின் மொத்த பழங்குடியின மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 5 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
  • இவர்கள் தமிழ் மற்றும் கன்னடம் போன்ற திராவிட மொழிகளைப் பேசுகின்றனர்.
  • காடர் பழங்குடியினர் கேரளாவில் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினக் குழுக்களாக பட்டியலிடப்பட்டுள்ள அதே வேளையில் அவர்கள் தமிழகத்தில் அவ்வாறு குறிப்பிடப் படவில்லை. 
  • இந்தக் குழுவின் கீழ் பட்டியலிடப் பட்டுள்ளப் பழங்குடியினர் 2006 ஆம் ஆண்டு வன உரிமைகள் சட்டத்தின் கீழ் வாழிட உரிமைகளைப் பெற அனுமதி பெறுவர்.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்