"High-risk Forests, High-value Returns: A Co-benefits Assessment for Decision-makers" என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையானது ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு (UNEP) மூலம் வெளியிடப்பட்டது.
சுமார் 391 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் அதிக ஆபத்துள்ள வெப்பமண்டல காடுகளைப் பாதுகாப்பதன் உலகளாவிய முக்கியத்துவத்தை இந்த அறிக்கை ஆராய்கிறது.
அதிக காடழிப்பு அபாயத்தை எதிர்கொள்கின்ற இந்தக் காடுகள் மக்களுக்கும் புவிக் கிரகத்திற்கும் அவசியமானவையாகும்.
இந்தக் காடுகளைப் பாதுகாப்பது பெரியளவிலான கார்பன் உமிழ்வைத் தடுக்கிறது மற்றும் நீர் மற்றும் மண் சீர்முறை, மழை நீர் மறுசுழற்சி, மகரந்தச் சேர்க்கை, உணவுப் பாதுகாப்பு மற்றும் 25 மில்லியன் ஏழை மக்களுக்கான வாழ்வாதாரம் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது.
ஆண்டுதோறும் பருவநிலை தொடர்பான சேதங்களில் 81 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான இழப்புகளைத் தவிர்க்க வளங்காப்பு உதவுகிறது.
இந்தக் காடுகளிலிருந்து பெறப்படும் சுற்றுச்சூழல் அமைப்புச் சேவைகள் ஆனது வன வளங்களைச் சார்ந்துள்ள பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு மிகவும் முக்கியமானவையாகும்.
வேளாண்மை, மரப் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு நன்மைகளை சமநிலைப்படுத்த மேம்பாடு மற்றும் பாதுகாப்பை ஒருங்கிணைப்பதை இந்த அறிக்கையானது நன்கு அறிவுறுத்துகிறது.
அதிகபட்சப் பருவநிலை, பல்லுயிர் மற்றும் சமூக வருமானத்திற்கான நிதியை எங்கு மையப்படுத்தி செலுத்துவது என்பது குறித்து பல்வேறு கொள்கை வகுப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு வழி காட்ட இது இடஞ்சார்ந்தத் தரவை வழங்குகிறது.