TNPSC Thervupettagam

காடுகள் மற்றும் உணவு குறித்த UN-FAO அறிக்கை

September 19 , 2026 2 days 33 0
  • 'உணவுக்கான காடுகள்: மக்களுக்கு ஊட்டமளித்தல், புவியை நிலைநிறுத்துதல்' என்ற அறிக்கை, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பால் (FAO) வெளியிடப் பட்டது.
  • இது லேண்ட்ஸ்கேப் அலையன்ஸ் உடன் இணைந்து உருவாக்கப்பட்டது.
  • இது பசி மற்றும் வறுமையைக் குறைப்பதில் காடுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது மற்றும் வேளாண் உணவு அமைப்பு கொள்கைகளில் அவற்றைச் சேர்க்குமாறு நாடுகளை வலியுறுத்துகிறது.
  • உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தில் (FSN) வன உணவுகளின் பங்களிப்பில் உள்ள பிராந்திய வேறுபாடுகளை இந்த அறிக்கை எடுத்துக்காட்டியது.
  • ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில், சில சமூகங்கள் தங்கள் தினசரி புரதத்தில் 80 சதவீதம் வரை காட்டு இறைச்சியிலிருந்து பெறுகின்றன.
  • அமேசான் காடுகளில், எடையின் அடிப்படையில் உட்கொள்ளப்படும் மொத்த உணவில் 44 சதவீதம் மீன்களாகும்; இவற்றுடன் காட்டு இறைச்சி, பிரேசில் கொட்டைகள் மற்றும் அசாய் பெர்ரிகளும் உள்ளன.
  • ஐரோப்பாவில், 28 நாடுகளை உள்ளடக்கிய ஒரு கணக்கெடுப்பில், பதிலளித்தவர்களில் 90 சதவீதம் பேர் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒரு காட்டு உணவையாவது உட்கொள்கின்றனர், அதே நேரத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் ஆண்டுதோறும் வேட்டை இறைச்சியை உண்கின்றனர்.
  • வட அமெரிக்காவில், காட்டு இறைச்சி வாழ்வாதாரத்தை விட பொழுது போக்கிற்காகவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
  • இந்தியாவின் பழங்குடிச் சமூகங்கள் காட்டு உணவுகளைப் பெருமளவில் பயன்படுத்துகின்றனர்.
  • அதே சமயம், அதிக வனப்பகுதி உள்ள இடங்களில் வாழும் குழந்தைகள் பலதரப்பட்ட உணவுகளை உட்கொள்வதோடு, வளர்ச்சி குன்றல் விகிதமும் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
  • கிழக்கு இந்தியாவில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், காட்டு உணவுகளை (பெரும்பாலும் காடுகளில் இருந்து பெறப்படுபவை) உட்கொள்வது, குறிப்பாகப் பற்றாக்குறைக் காலத்தில், பெண்களிடையே அதிக உணவுப் பன்முகத் தன்மை மதிப்பெண்களுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்