TNPSC Thervupettagam

காட்டுத் தீ குறித்த இந்தியாவின் வன ஆய்வறிக்கை (FSI)

March 11 , 2021 1617 days 703 0
  • இந்தியாவில் வன ஆய்வு நிறுவனமானது நாட்டில் ஏற்பட்டு வரும் காட்டுத் தீ குறித்த ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • காட்டுத் தீ ஆனது உலக அளவில் முக்கியத்துவம் பெற்று வரும் ஒரு பிரச்சினையாகும்.
  • பல்வேறு நாடுகளில், காட்டுத் தீ ஆனது பல்வேறு பகுதிகளில் பரவி எரிந்து கொண்டு இருக்கின்றது. தீ ஏற்படும் காலமானது புவி வெப்பமயமாதல் காரணமாக அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

முக்கிய அம்சங்கள்

  • 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 மற்றும் மார்ச் 1 ஆகிய தினங்களுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் ஒடிசாவில் குறைந்தது 5,291 காட்டுத் தீ நிகழ்வுகள் பதிவு செய்யப் பட்டு உள்ளன.  இது நாட்டில் ஏற்பட்ட மிக அதிக அளவிலான நிகழ்வு ஆகும்.
  • மகுவா மலர்கள் மற்றும் கெண்டு இலைகளின் சேகரிப்பு, இடப்பெயர்வு வேளாண்மை மற்றும் வனப் பகுதிகளில் கால்நடைகளை மேய்த்தல் ஆகியவை ஒடிசாவில் காட்டுத் தீ ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களாகும்.
  • FSI தரவின் படி இதே காலக் கட்டத்தில் தெலுங்கானாவானது 1527 நிகழ்வுகளுடன் 2வது அதிக தீ விபத்துகளைப் பதிவு செய்துள்ளது.
  • தற்கடுத்து மத்தியப் பிரதேசம் (1507) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (1292) ஆகியவற்றில் அதிக தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்