TNPSC Thervupettagam

காணாமல் போன ஏஎன்–32 விமானம்

June 11 , 2019 2252 days 723 0
  • ஜுன் 3 அன்று, ஏஎன்–32 என்ற ஒரு போக்குவரத்து விமானம் அஸ்ஸாமின் ஜோர்காட்டில் இருந்து அருணாச்சலப் பிரதேசம் நோக்கிப் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் காணாமல் போனது. இந்த விமானத்தில் 13 இந்தியர்கள் பயணித்தனர்.
  • காணாமல் போன விமானத்தைக் கண்டுபிடிப்பதற்காக கோஸ்பாஸ் – சார்சாட் என்பதின் கீழ் புவிக் கண்காணிப்புச் செயற்கைக் கோள்களினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அவற்றினால் அனுப்பப்பட்ட தகவல்களை இந்திய விமானப் படை மற்றும் இதர மீட்புப் படைகள் ஆராய்ந்து வருகின்றன.
  • இது ஒரு சர்வதேச செயற்கைக் கோள் அடிப்படையிலான தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பாகும்.
  • இது பின்வரும் அமைப்புகளைப் பயன்படுத்தி கப்பல்கள், விமானங்கள் மற்றும் தனிநபர்களினால் எடுத்துச் செல்லப்பட்ட அவசரகால உணர்விகளைத் தேடி, அவற்றைக் கண்டறிவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.
    • செயற்கைக் கோள்கள்
    • பூமியில் உள்ள நிலையங்கள்
    • திட்டக் கட்டுப்பாட்டு மையங்கள்
    • மீட்பு ஒருங்கிணைப்பு மையங்கள்
  • ரஷ்ய மொழியில் கோஸ்பாஸ் (COSPAS) என்பது “நெருக்கடியில் உள்ள கப்பலைத் தேடுவதற்கான விண்வெளி அமைப்பு” என்பதாகும்.
  • சார்சாட் (SARSAT) என்பது தேடுதல் மற்றும் மீட்பிற்கான செயற்கைக் கோள் உதவியுடன் கண்காணித்தல் என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்