இந்தியாவானது தெற்காசிய பிராந்தியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பு நாடுகளுடன் (SAARC) காணொலி வாயிலாக சுகாதாரச் செயலாளர் மட்டத்திலான ஒரு சந்திப்பை நடத்த உள்ளது.
இந்தச் சந்திப்பின் போது உறுப்பு நாடுகள் தற்பொழுது நிலவி வரும் கோவிட்-19 தொற்றுப் பிரச்சினை குறித்து விவாதிக்க உள்ளனர்.
இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ள பாகிஸ்தான் நாட்டிற்கும் அழைப்பு விடுக்கப் பட்டு உள்ளது.
இதற்கு முன்னதாக கொரானா – 19 நோய்த் தொற்றிற்கு எதிர்வினையாக சார்க் உறுப்பு நாடுகளால் கொரானா வைரஸ் அவசர கால நிதியமானது உருவாக்கப் பட்டு உள்ளது.
இந்த நிதியத்திற்கு இந்தியா 10 மில்லியன் அமெரிக்க டாலரை அளிக்க முன்வந்து உள்ளது.
சார்க் ஆனது 1985 ஆம் ஆண்டு டிசம்பர் 08 அன்று தொடங்கப்பட்டது.
இதன் தலைமையகமானது நேபாளத்தில் உள்ள காத்மண்டுவில் அமைந்துள்ளது.