காணொளி (வீடியோ) திருட்டு தடுப்புப் பிரிவு பெயர் மாற்றம்
October 29 , 2017 2740 days 1155 0
காணொளி திருட்டு தடுப்பு பிரிவை (Video Piracy Cell) அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு (Intellectual Property Right Enforcement Cell - IPREC) என தமிழக அரசாங்கம் மாற்றி அமைத்துள்ளது.
பதிப்புரிமை, வர்த்தக முத்திரைகள், வடிவமைப்புகள், காப்புரிமைகள் மற்றும் பொருட்களின் புவியியல் குறியீடுகள் ஆகியவற்றின் உரிமை மீறல் போன்ற குற்றங்களை விசாரணை செய்ய மாநிலத்தின் வெவ்வேறு மாவாட்டங்களில் உள்ள IPERC பிரிவுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சிறப்புப் பிரிவானது கீழ்க்காணும் சட்டங்களின் விதிமீறல்களில் இருந்து எழும் வழக்குகளையும் விசாரிக்கும்.
கேபிள் தொலைக்காட்சி தொடரமைவு (ஒழுங்குமுறை) சட்டம்
ஒளிப்பதிவு சட்டம்.
தாவர வகைகளின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டம்.
குறைகடத்தி ஒருங்கிணைந்த மின்சுற்றுவழி வடிவ அமைவுச் சட்டம் (Semiconductor Integrated Circuits Layout design Act).