‘காண்டீவ்’ (காண்டீபம்) எனப்படும் ஒரு வார அளவிலான வருடாந்திரப் பயிற்சியின் 3வது பதிப்பானது தேசிய பாதுகாப்புப் படையினால் நடத்தப்பட்டது.
தேசிய மாதிரிப் பயிற்சிகளின் ஒரு அங்கமாக ஒருங்கிணைந்த கமாண்டோ படைப் பயிற்சிகள் தீவிரவாத எதிர்ப்புப் படையான தேசியப் பாதுகாப்புப் படையினால் (National Security Guard – NSG) நடத்தப்பட்டது.
பிணைக் கைதியாக்குதல் மற்றும் கடத்தல் போன்ற சூழ்நிலைகளில் அவற்றை எதிர்த்து செயல்படும் நேரம் மற்றும் எதிர்வினை போன்றவற்றைச் சோதிப்பதற்காக வேண்டி இப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
‘காண்டீவ்’ என்பது மகாபாரதத்தில் வரும் அர்ஜுனனின் வில்லினுடைய பெயராகும்.
NSG ஆனது தீவிரவாதம் மற்றும் கடத்தல் ஆகிய அச்சுறுத்தல்களை எதிர் கொள்வதற்காக கமாண்டோ நடவடிக்கைகளை மேற்கொள்ளிட வேண்டி 1984 ஆம் ஆண்டில் ஒரு கூட்டு தீவிரவாத எதிர்ப்புப் படையாக உருவாக்கப்பட்டது.