காதித் துணியினால் நெய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக் கொடியானது லடாக் ஒன்றியப் பிரதேசத்தின் லே பகுதியில் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 02 அன்று பறக்க விடப் பட்டுள்ளது.
மகாத்மா காந்தி அவர்களின் 152வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு லடாக் துணை நிலை ஆளுநர் R.K. மாத்தூர் இந்த தேசியக் கொடியைப் படர விட்டார்.
இந்த நினைவுச் சின்னமான காதித் தேசியக் கொடியானது காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தினால் தயாரிக்கப்பட்டது.
இது 225 அடி நீளமும் 150 அடி அகலமும் 1,400 கிலோ கிராமிற்கும் அதிகமான எடையும் கொண்டதாகும்.
இந்தத் தேசியக் கொடியிலுள்ள அசோகச் சக்கரமானது 30 அடி விட்டம் உடையது.
இந்தக் கொடியைத் தயாரிப்பதற்கு 70 கைவினைஞர்களுக்கு 49 நாட்கள் ஆனது.