TNPSC Thervupettagam

காதி – வர்த்தகக் குறியீடு

July 14 , 2021 1437 days 525 0
  • காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையமானது காதிஎனும் தனது முத்திரைப் பெயருக்கு மெக்சிகோ, பூடான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் வர்த்தகக் குறியீட்டினை (trademark registration) பெற்றுள்ளது.
  • காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையமானது (Khadi and Village Industry Commission – KVIC) ஜூலை 09 அன்று பூடானில் வர்த்தகக் குறியீட்டினைப் பெற்றது.
  • 2021 ஆம் ஆண்டு ஜுன் 28 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இதற்கு வர்த்தகக் குறியீடானது வழங்கப்பட்டது.
  • இவ்வாறாக KVIC முதன்முறையாக வளைகுடா நாட்டில் தனது வர்த்தகக் குறியீட்டை வெற்றிகரமாக பெற்றுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மெக்சிகோ நாட்டில் இதற்கு வர்த்தகக் குறியீடு வழங்கப் பட்டது.
  • KVIC என்பது 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிறுவப்பட்ட ஒரு சட்ட ரீதியிலான அமைப்பாகும்.
  • இது 1956 ஆம் ஆண்டு காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணைய சட்டத்தின் கீழ் 2வது ஐந்தாண்டு திட்டத்தின் போது நிறுவப்பட்டது.
  • இது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.
  • இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது.
  • இது ஆறு மண்டல அலுவலகங்களைக் கொண்டு இயங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்