காந்தி சாகர் சரணாலயத்தில் சிவிங்கிப் புலிகள் – மத்தியப் பிரதேசம்
June 20 , 2024 329 days 370 0
மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவிற்கு அடுத்தப்படியாக காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயம் ஆனது இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் அறிமுகப் படுத்தப் படுவதற்கான இரண்டாவது இடமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சம்பல் நதியானது இந்தச் சரணாலயத்தின் குறுக்கே பாய்ந்து அதனை இரண்டு சம பாகங்களாக பிரிக்கிறது.
காந்தி சாகர் சரணாலயத்தின் சவன்னா (புல்வெளி) சுற்றுச்சூழல் அமைப்பு ஆனது, வறண்ட இலையுதிர் மரங்கள் மற்றும் புதர்கள் நிரம்பிய பரந்தப் புல்வெளிகளை உள்ளடக்கியதாகும்.
இது சவானா வனப்பகுதி மற்றும் வனவிலங்குகளுக்குப் பெயர் பெற்ற கென்யாவின் மசாய் மாரா தேசியக் காப்பகத்தினை ஒத்துள்ளது.