இந்தியக் காப்பீட்டு நிறுவனங்களில் முழு வெளிநாட்டு உரிமையை (100% அந்நிய நேரடி முதலீடு) மத்திய அமைச்சரவை அங்கீகரித்தது.
இந்தச் சீர்திருத்தம், பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப் படுத்தப் பட உள்ள 2025 ஆம் ஆண்டு காப்பீட்டுச் சட்டங்கள் (திருத்தம்) மசோதாவின் ஒரு பகுதியாகும்.
முன்மொழியப்பட்ட மாற்றங்களில் செலுத்தப்பட்ட மூலதனத் தேவைகளைக் குறைத்தல் மற்றும் காப்பீட்டாளர்களுக்கான கூட்டு உரிம முறையை அறிமுகப் படுத்துதல் ஆகியவை அடங்கும்.
ஆயுள் காப்பீட்டுக் கழக (LIC) வாரியம் ஆனது கிளை விரிவாக்கம் மற்றும் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட மேம்பட்டச் செயல்பாட்டு அதிகாரங்களைப் பெறும்.
இந்தச் சீர்திருத்தங்கள் காப்பீட்டுக் கொள்கை பதிவு செய்பவர்களின் பாதுகாப்பை அதிகரிப்பது, சேவைகளை மேம்படுத்துவது, போட்டியை அதிகரிப்பது மற்றும் உலகளாவிய மூலதனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.