TNPSC Thervupettagam

காப்பீட்டு நிறுவன உரிமை விதிகள் - IRDAI

August 5 , 2026 5 days 66 0
  • இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஆனது, IRDAI (காப்பீட்டாளர்களின் பதிவு, மூலதன அமைப்பு, பங்குகள் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு) விதிமுறைகள், 2026-இல் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
  • புதிய விதிகளின்படி, பங்கு இருப்பு 5%, 10%, 25%, 50% மற்றும் 75% வரம்புகளைத் தாண்டும்போது உரிமை மாற்றங்களுக்கு IRDAI-யிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
  • ஒரு முதலீட்டாளர் ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் தனிப்பெரும் பங்குதாரராக மாறும்போதும் இந்த அனுமதி தேவைப்படுகிறது.
  • இந்த திருத்தங்கள் நேரடி மற்றும் மறைமுக பங்கு பரிமாற்றங்கள், விளம்பரதாரர்-குழு பரிமாற்றங்கள் மற்றும் புதிய பங்குகள் வெளியீடு மூலம் ஏற்படும் நீர்த்தல் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.
  • இந்தியாவின் காப்பீட்டுத் துறையை ஒழுங்குபடுத்துவதற்காக, காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம், 1999 இன் கீழ் IRDAI நிறுவப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்