காப்பீட்டுத் திட்டங்களின் தவணைத் தொகையில் திருத்தம்
June 4 , 2022 1236 days 571 0
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) மற்றும் பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா (PMSBY) ஆகிய இரண்டு முக்கியச் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் தவணைக் கட்டணங்களை அரசாங்கம் திருத்தியுள்ளது.
PMJJBY திட்டத்தின் தவணை விகிதங்கள் முந்தைய ஆண்டுக்கான 330 ரூபாயில் இருந்து 436 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளன.
PMSBY திட்டத்தின் திருத்தப்பட்ட தவணைக் கட்டணமானது, ஆண்டுக்கு தற்போதுள்ள 12 ரூபாய்க்கு பதிலாக 20 ரூபாயாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டில் இந்த இரண்டு திட்டங்களும் தொடங்கப்பட்டதிலிருந்து தவணைக் கட்டணங்களில் மேற்கொள்ளப்படும் முதல் திருத்தம் இதுவாகும்.