TNPSC Thervupettagam

காப்பீட்டுத் துறையில் Ind AS

April 3 , 2026 14 hrs 0 min 25 0
  • இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது (IRDAI), காப்பீட்டுத் துறையில் இந்திய கணக்கியல் தரநிலைகளை (Ind AS) அறிமுகப்படுத்தி உள்ளது.
  • Ind AS என்பது 2015 ஆம் ஆண்டில் பெருநிறுவன விவகார அமைச்சகத்தால் அறிவிக்கப் பட்ட கணக்கியல் விதிகளாகும்.
  • இவை சர்வதேச நிதி அறிக்கை தரநிலைகளுடன் (IFRS) ஒத்துப்போகின்றன.
  • இந்தத் தரநிலைகள் நியாயமான மதிப்புக் கணக்கியல், சிறந்த வெளிப்படைத் தன்மை மற்றும் நிதி அறிக்கையிடலில் மேம்பட்ட நம்பகத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.
  • இதற்கு முன்பு, இந்தியா 'இந்தியா பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகளை' (Indian GAAP) பின்பற்றியது என்பதோடு மேலும் இது வரலாற்றுச் செலவு கணக்கியல் அடிப்படையில் 18 தரநிலைகளைக் கொண்டிருந்தது.
  • IRDAI என்பது இந்தியாவின் காப்பீட்டுத் துறையை ஒழுங்குபடுத்தவும் மேம்படுத்தவும் IRDAI சட்டம், 1999-இன் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்