TNPSC Thervupettagam

காப்புரிமை நடவடிக்கை நெடுஞ்சாலைத் திட்டம்

November 22 , 2019 2025 days 700 0
  • இந்திய காப்புரிமை அலுவலகத்தினால் (Indian Patent Office - IPO) செயல்படுத்தப்பட இருக்கும் காப்புரிமை நடவடிக்கை நெடுஞ்சாலைத் திட்டத்தை (Patent Prosecution Highway - PPH) ஏற்றுக் கொள்வதற்கான ஒரு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கின்றது.
  • இந்தத் திட்டமானது ஆரம்பத்தில் ஜப்பான் காப்புரிமை அலுவலகம் மற்றும் IPO ஆகியவற்றிற்கு இடையே சோதனை அடிப்படையில் மூன்று ஆண்டு காலத்திற்கு தொடங்கப்பட இருக்கின்றது.
  • PPH திட்டமானது, காப்புரிமை விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிப்பதற்கான நேரத்தைக் குறைத்தல் மற்றும் நிலுவையில் உள்ள காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் உள்பட IPOவிற்குப் பல்வேறு பலன்களைத் தர இருக்கின்றது.
  • இது ஆய்வு செய்தலின் தரத்தை செம்மையாக மேம்படுத்துவதற்கும் காப்புரிமை விண்ணப்பங்களை சோதனை செய்வதற்கும் வழிவகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்