TNPSC Thervupettagam

காமன்வெல்த் அமைப்பின் புதிய உறுப்பினர்கள்

July 1 , 2022 1113 days 520 0
  • மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான காபோன் மற்றும் டோகோ ஆகியவை காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் உறுப்பினர்களாக இணைந்துள்ளன.
  • பிரிட்டனுடன் எந்தவொரு வரலாற்றுத் தொடர்பு உறவுகளும் இல்லாத, இராணி இரண்டாம் எலிசபெத் தலைமையிலான ஆங்கில மொழி பேசும் நாடுகளின் குழுவில் நுழைகின்ற நாடுகள் இவை மட்டுமே ஆகும்.
  • இந்த நாடுகள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்ததேயில்லை.
  • இவை ருவாண்டாவின் கிகாலியில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டன.
  • தற்போது இந்த அமைப்பின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 56 ஆக உள்ளது.
  • 2009 ஆம் ஆண்டில் ருவாண்டா இதில் இணைந்ததற்குப் பிறகு காமன்வெல்த் அமைப்பில் இணைந்த முதல் புதிய உறுப்பினர் நாடு பிரெஞ்சு மொழி பேசும் மக்களைக் கொண்ட இந்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளாகும்.
  • முன்பு போர்த்துகீசியக் காலனியாக இருந்த மொசாம்பிக், பிரிட்டனுடன் வரலாற்றுத் தொடர்புகள் இல்லாத முதல் காமன்வெல்த் உறுப்பினராக 1995 ஆம் ஆண்டில் இந்த அமைப்பில் இணைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்