காமன்வெல்த் அமைப்புடன் மீண்டும் இணைப்பு - மாலத்தீவு
February 5 , 2020 2107 days 847 0
2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று மாலத்தீவானது காமன்வெல்த் அமைப்பில் மீண்டும் அதிகாரப் பூர்வமாக இணைந்துள்ளது.
இது காமன்வெல்த் ஒன்றியத்தின் 54வது உறுப்பு நாடாக உருவெடுத்துள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ருவாண்டாவில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தின் ஒரு பகுதியாக மாலத்தீவு கலந்துகொள்ள இருக்கின்றது.
மாலத்தீவானது 1982 ஆம் ஆண்டில் காமன்வெல்த் அமைப்பில் சேர்ந்தது. இது 2016 ஆம் ஆண்டில் இந்த அமைப்பிலிருந்து வெளியேறியது.