TNPSC Thervupettagam

காமன்வெல்த் அரசுத் தலைவர்கள் மாநாடு 2026

November 15 , 2026 6 hrs 0 min 24 0
  • 28-வது காமன்வெல்த் அரசுத் தலைவர்கள் மாநாடு (CHOGM) 2026 ஆம் ஆண்டு நவம்பர் 4 அன்று ஆன்டிகுவா மற்றும் பார்புடாவின் செயின்ட் ஜான்ஸ் நகரில் நிறைவடைந்தது.
  • “வளமான காமன்வெல்த் அமைப்பிற்கான கூட்டாண்மை மற்றும் முதலீட்டை விரைவுபடுத்துதல்” என்ற கருத்துருவின் கீழ் இம்மாநாடு நடைபெற்றது.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல், இளைஞர் திறன் மேம்பாடு, வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிற்காக சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் புதிய நிதி உறுதிமொழிகள் திரட்டப்பட்டன.
  • பருவநிலை மீள்தன்மை, நிலையான வளர்ச்சி, புத்தாக்கம், சமத்துவம், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் இம்மாநாட்டின் விவாதங்கள் கவனம் செலுத்தின.
  • உறுப்பு நாடுகளில் உள்ள பொருட்கள், சேவைகள் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் குறித்த தகவல்களை வழங்குவதற்காகவும், குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) பயனளிக்கும் வகையிலும் காமன்வெல்த் வர்த்தக இணையதளம் தொடங்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்