TNPSC Thervupettagam

காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் நாடு

April 24 , 2024 12 days 161 0
  • 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அடுத்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான நாட்டினைத் தேர்ந்தெடுக்கும் முயற்சி தொடர்ந்து வருகிறது.
  • முதலில், இந்தப் போட்டியை நடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய மாகணமான விக்டோரியா அதிலிருந்து பின்வாங்கியது.
  • தற்போது செலவினங்கள் மற்றும் போதிய நிதியானது வழங்கப்படவில்லை என்பதால் மலேசியாவும் இந்த வாய்ப்பினை நிராகரித்துள்ளது.
  • இங்கிலாந்து நகரமான பர்மிங்காம் நகரம், 2026 ஆம் ஆண்டில் இந்தப் போட்டியினை நடத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
  • ஆனால் தென்னாப்பிரிக்காவிடம் இருந்து 2022 ஆம் ஆண்டுப் போட்டிகளை நடத்தச் செய்வதற்கான உரிமையைப் பறித்த பிறகு 2022 ஆம் ஆண்டு போட்டிகளை நடத்த முன்வர வேண்டிய பர்மிங்ஹாம் நகரத்திற்கு கட்டாயம் ஏற்பட்டது.
  • சமீபத்திய ஆண்டுகளில் மற்றும் கடந்த ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகள் ஆஸ்திரேலியா அல்லது பிரிட்டனில் நடைபெற்றன.
  • அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக கனடாவின் ஆல்பர்ட்டா அரசு, 2030 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான முயற்சிக்கான ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்