TNPSC Thervupettagam

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026 - இந்தியா

August 5 , 2026 7 days 109 0
  • கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் (CWG) இந்தியா 39 பதக்கங்களுடன் (13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம்) 4-வது இடத்தைப் பிடித்தது.
  • 1998 கோலாலம்பூர் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு, 24 ஆண்டுகளில் இந்தியா மிகக்குறைந்த பதக்கப் பட்டியலைப் பதிவு செய்தது. இருப்பினும் குறைக்கப்பட்ட போட்டி அட்டவணைக்கு மத்தியிலும் வலுவான நிலையை அடைந்துள்ளது.
  • குத்துச்சண்டை, ஜூடோ, தடகளம், பாரா-தடகளம் மற்றும் பளுதூக்குதல் ஆகியவற்றில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு குத்துச்சண்டையில் 7 தங்கப் பதக்கங்கள் உட்பட 10 பதக்கங்களை வென்றுள்ளது.
  • ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்; அதேசமயம் மீராபாய் சானு பளுதூக்குதலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக காமன்வெல்த் தங்கப் பதக்கத்தை வென்றார்.
  • ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் கனடாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 4-வது இடத்தைப் பிடித்ததுடன், வெள்ளிப் பதக்கக் கணக்கீட்டின் அடிப்படையில் போட்டியை நடத்தும் நாடான ஸ்காட்லாந்தை விட முன்னிலைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்