TNPSC Thervupettagam

காமிகேஸ் ரக ஆளில்லா விமானங்கள்

November 16 , 2022 903 days 401 0
  • இந்திய இராணுவம் இலக்கினைக் குறிவைத்து தாக்கும் 120 ஆயுத அமைப்புகள் மற்றும் 10 வான்வழி இலக்கு தாக்குதல் அமைப்புகளை வாங்குவதற்கான ஒரு செயல் முறையைத் தொடங்கியுள்ளது.
  • இந்திய இராணுவம் காமிகேஸ் ரக ஆளில்லா விமானங்களை வாங்க உள்ளது.
  • இது சீனாவுடனான இந்திய எல்லைப் பகுதியில் தனது இராணுவ பலத்தை வலுப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டு வாங்கப்படவுள்ளது.
  • வான்வழி இலக்குத் தாக்குதல் அமைப்புகள் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும், அதாவது 100 கி.மீ. தாக்குதல் வரம்புடையதாக இருக்க வேண்டும்.
  • காமிகேஸ் ரக ஆளில்லா விமானங்கள் ரஷ்யா-உக்ரைன் போரில் பயன்படுத்தப்பட்ட அதே ரக ஆளில்லா விமானங்களாகும்.
  • ஆளில்லா விமானத்தைப் போன்றே இலக்கினைக் குறி வைத்துத் தாக்கும் ஆயுத அமைப்புகளையும் ஏவ இயலும்.
  • இவை அதிக நேரம் காற்றில் நிலைபெற்று, குறிப்பிட்ட பகுதியை ஆய்வு செய்து இலக்குகளைத் தேடி தாக்கும் திறன் கொண்டவை.
  • ஒரு இலக்கை அடையாளம் கண்டு பதிவு செய்தவுடன், அந்த குறி வைக்கப்பட்ட இலக்கை அழிக்க இந்த அமைப்பு ஓர் ஏவுகணையாகச் செயல்படும்.
  • குறிப்பிடத் தக்க வகையில், இவை போர் அல்லது ஆயுதம் ஏந்திய ஆளில்லா விமானங்களை விட அளவில் சிறியவை, மலிவானவை மற்றும் அதிகளவில் சிக்கலான வடிவமைப்புகள் இல்லாதவை.
  • இந்திய இராணுவமானது, 100 K9 வஜ்ரா ஹவிட்சர்கள் எனப்படும் நீண்ட தூர வரம்பு உடைய ஆயுதங்கள் மற்றும் ஆளில்லா வான்வழி விமானங்கள் உட்பட பல்வேறு கூடுதல் ஆயுத அமைப்புகளை வாங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்