காரீஃப் பருவப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு
June 14 , 2023 927 days 414 0
காரீஃப் அல்லது பருவமழை காலத்தில் விதைக்கப்பட்ட நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு 2,183 ரூபாயாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
இது கடந்த ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டதை விட குவிண்டாலுக்கு சுமார் 143 ரூபாய் என்ற அளவில் அதிகரிக்கப் பட்டுள்ளது.
17 காரீஃப் பருவ பயிர்கள் மற்றும் வகைகளுக்கான 2023-24 ஆம் ஆண்டிற்கான குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்வு தொடர்பான ஒரு முடிவானது மத்தியப் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் (CCEA) கூட்டத்தில் அங்கீகரிக்கப் பட்டது.
பாசிப் பயறுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒரு குவிண்டாலுக்கு 8,558 ரூபாயாக நிர்ணயிக்கப் பட்டுள்ள நிலையில் இது கடந்த ஆண்டை விட 803 ரூபாய் அதிகரிக்கப் பட்டுள்ளது.
காரீஃப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வில், இப்பயிருக்கான உயர்வு மிக அதிகமாகும்.
துவரை அல்லது அர்ஹர் பருப்பிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையானது ஒரு குவிண்டாலுக்கு 7,000 ரூபாயாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இது உற்பத்திச் செலவை விட 58% அதிகமாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.