April 22 , 2022
1200 days
513
- 2022-23 ஆம் ஆண்டிற்கான காரீஃப் பருவத்திற்கான வேளாண்மை குறித்த ஒரு தேசிய மாநாட்டை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்.
- இது புதுடெல்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் தொடங்கப் பட்டது.
- 2வது மேம்படுத்தப் பட்ட மதிப்பீடுகளின்படி (2021-22), நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தியானது 3160 லட்சம் டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- இது இதுவரையில் பதிவானதை விட அதிக வரம்பை எட்டியுள்ளது.
- எண்ணெய் வித்துகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றின் உற்பத்தி முறையே 371.5 மற்றும் 269.5 லட்சம் டன்களாக இருக்கும்.
- 3 வது மேம்படுத்தப் பட்ட மதிப்பீடுகளின்படி, 2020-21 ஆம் ஆண்டில் தோட்டக்கலை உற்பத்தி 3310.5 லட்சம் டன்கள் ஆக இருந்தது.
- இது நாட்டின் தோட்டக்கலைத் துறையில் இதுவரை பதிவாகாத அளவுக்கு அதிகமாக உள்ளது.

Post Views:
513