குடிமைப் பணியாளர்கள் கூட்டமைப்பானது காருணா (CARUNA - Civil Services Associations Reach to Support Natural Disasters) என்ற ஒரு முன்னெடுப்பைத் தொடங்கி உள்ளது.
CARUNA என்பது “இயற்கைப் பேரிடர்களுக்கு ஆதரவளிக்க முன்வரும் குடிமைப் பணியாளர்கள் கூட்டமைப்பு” என்பதாகும்.
CARUNA என்பது ஒரு கூட்டுத் தளமாகும்.
இது இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்தியக் காவற் பணி அதிகாரிகள் ஆகியோரைக் கொண்டுள்ளது.
இந்தத் தளமானது குடிமைப் பணியாளர்களுடன் அரசு சாரா அமைப்பு, தொழிற்துறைத் தலைவர்கள், தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோரால் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகின்றது.
இந்த முன்னெடுப்பானது கரோனா நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காகத் தொடங்கப்பட்டு இருக்கின்றது.
இது இடப்பெயர்வு, மருத்துவ உபகரணங்கள், அத்தியாவசியப் பொருட்கள், செயற்கை சுவாசக் கருவிகள், கையுறைகள் ஆகியவை குறித்த ஒரு தகவல் தளத்தை உருவாக்க உதவுகின்றது.
இந்த முன்னெடுப்பானது மாவட்ட அளவில் மேற்குறிப்பிட்டுள்ளவற்றில் உள்ள பற்றாக்குறைகளைக் களைய உதவ இருக்கிறது.