கார்கில் போரில் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல்
May 29 , 2019 2260 days 737 0
பஞ்சாபின் பதின்டாவில் உள்ள பிசியானா விமானப் படைத் தளத்திலிருந்து இந்திய விமானப் படையின் தலைமைத் தளபதியான பி.எஸ். தனோவா தலைமையில் 4 மிக்-21 விமானத்தில் பறந்து சென்று கார்கில் போரில் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கார்கில் போரின் போது மரணமடைந்தவர்களைக் குறிக்கும் விதமாக இரு விமானங்களிடையே ஒரு இடைவெளியுடன் கூடிய ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. இது ஒரு வில் போன்ற ஒரு அமைப்பாகும்.
இது கார்கிலில் சபெத் சாகர் நடவடிக்கையின் போது உயிர்த் தியாகம் செய்த வீரர்களைக் கௌரவிப்பதற்காக நடத்தப்பட்டது.
சபெத் சாகர் நடவடிக்கை என்பது கார்கில் போரின் போது தரைப் படையுடன் இணைந்துப் போரிட்ட இந்திய விமானப் படையின் பணிக்கு வழங்கப்பட்ட ஒரு குறியீட்டுப் பெயராகும்.