TNPSC Thervupettagam

கார்சீனியா குசுமே

July 9 , 2025 10 days 53 0
  • கார்சீனியா குசுமே என்பது வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒரு மர இனமாகும் என்பதோடு இது அசாமிய மொழியில் தோய் கோரா என்று அழைக்கப்படுகிறது.
  • இது வெப்பமண்டல மரங்கள் மற்றும் புதர்களின் ஒரு பெரிய குழுவான கார்சீனியா இனத்தைச் சேர்ந்தது.
  • இந்த மரமானது பசுமை மாறாத வகையினைச் சார்ந்தது என்பதோடு இது இரு பாற் கூறுகள் தனித் தனியாக அமைந்த (டையோசியஸ்) மேலும் 18 மீட்டர் உயரம் வரையில் வளரக் கூடிய இனமாகும்.
  • அந்தப் பகுதிகளில், வெப்பத் தாக்கத்தைத் தணிப்பதற்காக என புத்துணர்ச்சியூட்டும் ஷர்பத் பானம் தயாரிக்க இதன் பழம் பயன்படுத்தப்படுகிறது.
  • இந்தப் பழமானது சமையலிலும் நீரிழிவு மற்றும் வயிற்றுப்போக்குக்கான பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
  • அசாமில் மட்டும் 12 இனங்கள் மற்றும் 3 வகையான கார்சீனியா உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்