கார்பனை உறிஞ்சும் துந்த்ரா பகுதி முதன்மை மூலமாக மாற்றம்
April 28 , 2024 450 days 432 0
ஆர்க்டிக் மற்றும் அல்பைன் துருவப்பகுதிப் பாலைவன (துந்த்ரா) சூழல் அமைப்புகள் மிகப் பெரிய அளவிலான கரிம கார்பன் தேக்கங்களாக அறியப்படுகின்றன.
புவியின் வெப்பமயமாதல் ஆனது துருவப்பகுதி பாலைவனச் சூழல்களின் பண்புகளை மாற்றலாம் மற்றும் அவற்றைக் கார்பன் உறிஞ்சு பகுதியிருந்து கார்பன் உமிழ்வு மூலங்களாக மாற்றலாம்.
உயரும் வெப்பநிலைகள் ஒரு பகுதியின் நைட்ரஜன் அளவுகள் மற்றும் Ph அளவினை மாற்றுவதால் அப்பகுதியின் உயிர் வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
காற்றின் வெப்பநிலையில் சராசரியாக ஏற்படும் 1.4 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பு ஆனது, மண்ணின் வெப்பநிலையில் 0.4 டிகிரி செல்சியஸ் மற்றும் மண்ணின் ஈரப் பதத்தில் 1.6 சதவிகிதம் குறைவினை ஏற்படுத்தி பயிர் வளரும் பருவத்தில் அவற்றின் சுவாச இயக்கத்தில் 30 சதவிகிதம் அதிகரிக்க வழிவகுக்கிறது.
துருவப்பகுதி பாலைவனப் பகுதியின் உயிரி கட்டமைப்பில் வெப்பமயமாதல் விகிதம் ஒரு தசாப்தத்திற்கு 0.73° C வெப்பநிலையினை எட்டக் கூடும் என்பதோடு, இது ஒரு தசாப்தத்திற்கு 0.19° C என்ற உலகளாவிய சராசரி விகிதத்தைக் கணிசமான அளவில் விஞ்சுகிறது.
மேலும், மண்ணின் ஈரப்பதம் 1.6 சதவிகிதம் குறைந்து, கார்பன் உறிஞ்சியாகச் செயல் படும் துருவப்பகுதி பாலைவனப் பகுதியின் திறனைப் பாதிக்கிறது.