கார்பன் விலை நிர்ணயத்தின் நிலை மற்றும் போக்குகள் 2025
June 17 , 2025 18 days 136 0
இது உலக வங்கியினால் கார்பன் விலை நிர்ணயத்தின் நிலை மற்றும் போக்குகள் 2025 என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையாகும்.
கார்பன் விலை நிர்ணயக் கருவிகள் ஆனது பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வுகளின் வெளிப்புறச் செலவினங்களை ஆய்வு செய்கின்றன.
பயிர்களுக்குச் சேதம், வெப்ப அலைகள் மற்றும் வறட்சியால் ஏற்படும் சுகாதாரச் செலவினங்கள் மற்றும் வெள்ளம் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவற்றால் ஏற்படும் சொத்து இழப்பு போன்ற இந்த வெளிப்புறச் செலவினங்கள் மிகப் பொதுவாக பொது மக்களால் மேற்கொள்ளப்படுகின்றன.
கார்பன் விலை நிர்ணய வழிமுறைகள் ஆனது, பொதுவாக வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு (CO2) மீதான விலை மூலம் இந்தச் செலவினங்களை அவற்றின் சில மூலங்களுடன் இணைக்கின்றன.
இந்த ஒரு அறிக்கையானது, உமிழ்வு வர்த்தக அமைப்பு (ETS), கார்பன் வரிகள் மற்றும் கார்பன் மதிப்பு வர்த்தக வழிமுறைகள் ஆகிய மூன்று வகையான கார்பன் விலை நிர்ணய கருவிகளை உள்ளடக்கியது.
ETS என்பது உமிழ்வு அமைப்புகளால் உருவாக்கப் படும் GHG உமிழ்வுகளின் அளவு அல்லது தீவிரத்தில் அரசாங்கங்கள் ஒரு வரம்பை நிர்ணயிப்பதை உள்ளடக்கியது.
நிறுவனங்கள் தங்கள் இலக்குகளை அடைய உமிழ்வு அலகுகளை வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்படுகின்றன.
அவை தங்கள் உமிழ்வைக் குறைக்க என உள்நடவடிக்கைகளைச் செயல்படுத்தினால், இந்த அலகுகளை மற்ற உமிழ்வு அமைப்புகளுக்கு அவை விற்கலாம்.
கார்பன் வரியானது பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் அல்லது புதைபடிவ எரி பொருட்களின் கார்பன் உள்ளடக்கம் மீதான வரி விகிதத்தை வரையறுப்பதன் மூலம் கார்பன் மீது வெளிப்படையாக விலை நிர்ணயம் செய்கிறது.
அரசாங்கங்கள் தங்கள் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்காக நிறுவனங்கள் மீது இந்தக் கட்டணத்தை விதிக்கலாம்.
ஒரு மதிப்பு வழங்கீட்டுச் செயல்முறையானது, உமிழ்வைக் குறைக்கும் (எ.கா., நிலப் பரப்புகளில் இருந்து மீத்தேன் பிடிப்பு) அல்லது அவற்றை அகற்றும் (எ.கா., காடு வளர்ப்பு மூலம் கார்பன் பிடிப்பு) பல்வேறு செயல்பாடுகள் மூலம் உருவாக்கப்படும் மதிப்புகளை (ஒவ்வொன்றும் சுமார் 1 டன் கார்பனுக்குச் சமம்) வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது.
பின்னர் இந்த நிறுவனங்கள் தங்கள் சொந்த உமிழ்வை ஈடு செய்ய இந்த மதிப்புகளை வாங்கலாம்.
உலக நாடுகள் ஆனது, தற்போது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் மூன்றில் இரண்டு பங்கைக் குறிக்கின்ற கார்பன் விலை நிர்ணயத்தினை அதிகளவில் ஏற்றுக்கொள்கின்றன.
செயல்பாட்டில் உள்ள கார்பன் விலை நிர்ணய கருவிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்பதோடு 2005 ஆம் ஆண்டில் 5 ஆக இருந்த இது இன்று 80 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியா, பிரேசில் மற்றும் துருக்கி ஆகியவை அவற்றை மிகவும் தீவிரமாக உருவாக்கி வருகின்றன.
கார்பன் விலை நிர்ணயக் கருவிகள் தற்போது உலகளாவியப் பசுமை இல்ல வாயு உமிழ்வில் தோராயமாக 28 சதவீதத்தை உள்ளடக்கியது.
பெரும்பாலான புதிய மற்றும் திட்டமிடப்பட்ட கருவிகள் ETSகள் என்று இந்த அறிக்கை குறிப்பிட்டது.
இந்தியாவின் ETS என்பது விகித அடிப்படையிலானதாக இருக்கும் என்பதாக, அதாவது இந்த உமிழ்வுகளுக்கு இங்கு வரம்பிடப்படவில்லை.
அதற்குப் பதிலாக, உமிழ்வு அமைப்புகளுக்கு அவற்றின் நிகர உமிழ்வுகளில் வரம்பாக செயல்படும் செயல்திறன் அளவுருக்கள் ஒதுக்கப்படுகின்றன.
பல்வேறு துறைகளில், கார்பன் விலை மீதான நிர்ணயம் ஆனது மின் துறையில் மிக அதிகமாகவும், அதைத் தொடர்ந்து தொழில்துறை, சுரங்கம் மற்றும் அகழந்தெடுப்பு / பிரித்தெடுக்கும் துறை, கட்டிடங்கள், நிலம் சார் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளும் உள்ளன.
இருப்பினும், கழிவுகள் மற்றும் வேளாண்மை ஆகிய துறைகளில் மிகப் பெரும்பாலும் கார்பன் விலை நிர்ணயம் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.
தேசிய நிர்ணயிக்கப்பட்டப் பங்களிப்புகள் ஆனது தேசியப் பருவ நிலை இலக்குகளை பூர்த்தி செய்ய பாரிசு உடன்படிக்கையின் 6வது பிரிவின் கீழ் சர்வதேசக் கார்பன் மதிப்புகளுக்கான ஒரு நாட்டின் தேவை ஆகும்.