TNPSC Thervupettagam

கார்ப்ஃபிக்ஸ் கார்பன் சேமிப்பு தொழில்நுட்பம்

October 14 , 2026 8 days 100 0
  • புவிவெப்ப ஆற்றல் மற்றும் அதன் கார்ப்ஃபிக்ஸ் (Carbfix) தொழில்நுட்பம் உள்ளிட்ட கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) ஆகியவற்றில் இந்தியாவுடன் ஒத்துழைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஐஸ்லாந்து ஆராய்ந்து வருகிறது.
  • இந்தியா மதிப்பிடப்பட்ட 10.6 ஜிகாவாட் புவிவெப்ப ஆற்றல் திறனைக் கொண்டு உள்ளதுடன், புவி வெப்ப ஆற்றல் மீதான தேசியக் கொள்கையின் மூலம் அதன் மேம்பாட்டை ஊக்குவிக்கிறது.
  • ஐஸ்லாந்து அதன் மின்சாரத்தில் 70% ஐ நீர் மின்சாரம் மூலமாகவும், 30% ஐ புவிவெப்ப ஆற்றலில் இருந்தும் உற்பத்தி செய்கிறது, மேலும் இந்தியாவுக்கு தொழில்நுட்ப மற்றும் ஒழுங்குமுறை நிபுணத்துவத்தை வழங்குகிறது.
  • ஐஸ்லாந்தின் கார்ப்ஃபிக்ஸ் தொழில்நுட்பமானது, பிடிக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைடை (CO₂) நிரந்தர கனிமமயமாக்கல் மூலம் கல்லாக மாற்றுகிறது என்பதுடன் இது கார்பனை நிலத்தடியில் சேமிக்க உதவுகிறது.
  • கார்ப்ஃபிக்ஸ் இந்தியாவின் எஃகு மற்றும் சிமெண்ட் தொழில்களில் இருந்து கார்பன் உமிழ்வைக் குறைக்க உதவலாம்; இந்தத் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதற்காக இந்தியாவுடன் ஐஸ்லாந்து ஒத்துழைப்பை நாடுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்