TNPSC Thervupettagam

காற்றாலை மின் உற்பத்தி விநியோகச் சங்கிலி மேலாண்மை வலைத்தளம்

June 21 , 2026 16 hrs 0 min 31 0
  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமானது கோவாவில் நடைபெற்ற உலகளாவிய காற்று தின மாநாட்டில், இந்தியாவின் முதல் பிரத்யேக காற்றாலை மின் உற்பத்தி விநியோகச் சங்கிலி மேலாண்மை வலைத்தளமான WT-MARUT-(காற்றாலை – பொருட்கள், வளங்கள் மற்றும் தொழில்நுட்பம்) அறிமுகப்படுத்தியது.
  • WT-MARUT என்பது இந்தியாவின் உள்நாட்டு காற்றாலை உற்பத்திக்கான விநியோகச் சங்கிலியை நிர்வகிக்கவும், கண்காணிக்கவும் மற்றும் மேம்படுத்தவும் வடிவமைக்கப் பட்ட ஒரு உள்நாட்டு, மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளமாகும்.
  • இந்த வலைதளமானது உள்நாட்டு காற்றாலை உற்பத்தித் திறனை வலுப்படுத்தச் செய்வதையும், காற்றாலை எரிசக்தி விநியோகச் சங்கிலி முழுவதும் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது விநியோகச் சங்கிலி குறித்த முழுமையான பார்வை, வழங்குநர் கண்டுபிடிப்பு, அங்கீகரிக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் பட்டியல் (ALMM) இணக்கம் மற்றும் காற்றாலை துறையில் உள்ள பங்குதாரர்களுக்கான கூட்டுத் தளம் ஆகியவற்றை வழங்குகிறது.
  • இந்தியாவின் மதிப்பிடப்பட்ட காற்றாலை மின்திறனான 1,164 ஜிகாவாட்-இல் (GW), இதுவரை 56.1 ஜிகாவாட் திறன் கொண்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன என்பதோடு 2030 ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் காற்றாலை மின்திறனை அடைய வேண்டும் என்ற தேசிய இலக்கை அடைய இந்த வலைதளம் துணை புரியும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்