காற்று மாசுபாடு மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய்
November 5 , 2023 660 days 374 0
சர்வதேச இதழ்களில் வெளியிடப்பட்ட இரண்டு ஆய்வுகள் ஆனது, சென்னை மற்றும் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டிற்கும் இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து அறிக்கையளித்துள்ளன.
மக்களுக்கான மோசமான காற்று உள்ள இடங்களின் பட்டியல்களில் இந்திய நகரங்கள் தொடர்ந்து முன்னணியில் உள்ளன.
நகரங்களின் காற்றின் தரம் ஆனது உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த வரம்புகளை கடந்து அடிக்கடி பல மடங்கு அதிகரிக்கிறது.
ஒவ்வொரு மாதமும் PM2.5 அளவுகளில் ஏற்படும் ஒரு கனமீட்டரில் 10 மைக்ரோகிராம் (μg/m3) என்ற அதிகரிப்பினால், உணவுக்கு முன் எடுத்த சோதனையில் பிளாஸ்மா குளுக்கோஸ் அளவானது (FPG) 0.21-0.58 mg/dL (ஒரு டெசிலிட்டருக்கு மில்லிகிராம்கள்) மற்றும் கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின் அளவானது (HbA1c) 0.012-0.024 அதிகரித்துள்ளது.
சென்னையில் FPG அளவுகள் 0.36-1.39 mg/dL ஆகவும், HbA1c அளவுகள் 0.01-0.06 ஆகவும் அதிகரித்துள்ளது.
ஆறு மாதங்களில், PM2.5 அளவுகளில் ஏற்பட்ட 10 μg/m3 அதிகரிப்பு ஆனது டெல்லியில் இந்த இரண்டு அளவுகளின் வரம்புகளையும் இரட்டிப்பாக்கியது.
ஆனால் சென்னையில் பதிவான பல்வேறு முடிவுகளுடன் புள்ளியியல் ரீதியாக இதனை தொடர்புபடுத்த முடியவில்லை.
வருடாந்திர சராசரியில் “PM2.5” என்ற அளவானது இரண்டாம் வகை நீரிழிவு நோய் வருவதற்கான 9 முதல் 36% வரையிலான அதிக ஆபத்து நிலையுடன் தொடர்பு உடையதாக இருக்கலாம்.