TNPSC Thervupettagam

காற்று மாசுபாட்டைச் சமாளிப்பதற்கான உலகளாவிய கொள்கை அறிக்கைகள்

July 29 , 2025 10 hrs 0 min 14 0
  • உலகளவில் காற்று மாசுபாட்டின் சுகாதார பாதிப்புகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய அறிவியல் மற்றும் கொள்கை அறிக்கைகளை (SPS) உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொலம்பியாவின் கார்டஜெனாவில் நடைபெற்ற காற்று மாசுபாடு மற்றும் சுகாதாரம் குறித்த இரண்டாவது WHO உலகளாவிய மாநாட்டைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
  • இந்த SPS ஆவணங்கள் துறை சார்ந்த கொள்கை வழிகாட்டுதலை குறிப்பாக காற்று மாசுபாட்டால் விகிதாச்சாரச் சுமையை எதிர்கொள்ளும் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • SPS அறிக்கைத் தொடர் ஆனது, சமீபத்திய அறிவியல் சான்றுகளை அரசாங்கங்கள் மற்றும் முடிவெடுப்பவர்களுக்கு செயல்படுத்தக் கூடிய கொள்கைப் பரிந்துரைகளாக வழங்குகிறது.
  • WHO ஆனது, காற்றின் தரத்திற்கு கணிசமாக பங்களிக்கின்ற போக்குவரத்து, எரிசக்தி, கழிவு மேலாண்மை மற்றும் வேளாண்மை போன்ற துறைகளில் ஒருங்கிணைந்த முயற்சிகளை இயக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்