இந்திய அறிவியலாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள், மாநில அளவிலான அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மாவட்ட அளவிலான தரவை அடிப்படையாகக் கொண்டு 12 இமாலய மாநிலங்களின் பாதிப்புக் குறியீட்டைத் தயாரித்துள்ளனர்.
இதன் இலக்கானது பொதுவான முறைமையை உருவாக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாது காலநிலை மாற்றம் பற்றிய கோளாறுகளை சமாளிப்பதற்கும் இந்த மாவட்டங்கள் எந்த அளவிற்கு தயாராக உள்ளன என்பதையும் தீர்மானிக்க உதவும்.
பாதிப்பு என்பது ஒரு மாவட்டம் சந்திக்கும் உள்ளார்ந்த அபாயங்களை அதன் புவியியல் தன்மை மற்றும் சமூக பொருளாதார நிலை ஆகியவற்றின் மூலம் முதன்மையாக அளவிடுதல் ஆகும்.
கீழ்க்காணும் எட்டு முக்கிய அளவுருக்களின் அடிப்படையில் பாதிப்புப் புள்ளிகளானது உருவாக்கப்படுகிறது.
வனப் பகுதிகளின் சதவீதம்
உணவு தானியங்களின் விளைச்சல் மாறுபாடு
30 சதவிகிதத்திற்கும் அதிகமாக சாய்வாக உள்ள பரப்பு
MGNREGA திட்டத்தின் கீழ் சராசரி மனித வேலை நாட்கள்
மக்கள் அடர்த்தி
குழந்தைகள் இறப்பு வீதம்
பெண்கள் கல்வியறிவு
வறுமைக் கோட்டிற்கு கீழேயுள்ள குடும்பங்களின் சதவீதம்
0 – 1 அளவிலான அளவுகோலில் 1 ஆனது அதிகமான பாதிப்பைக் குறிக்கிறது. 0.72 புள்ளிகளுடன் அசாம் இந்த அளவுகோலில் முதலிடத்திலும் மிசோரம் 0.71 புள்ளிகளுடன் அடுத்த இடத்திலும் உள்ளன.
அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையானது அனைத்து மாநிலங்களுக்குமான ஒரு காலநிலை தளத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் நாட்டில் உள்ள எந்தவொரு மாவட்டத்தையும் மிக உன்னிப்பாக கவனித்து காலநிலை மற்றும் சமூகப் பொருளாதாரத்தில் எவ்வகையான அபாயங்கள் உள்ளன என்பதைக் காணலாம்.