காலநிலை மற்றும் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச இராணுவ மன்றம்
March 14 , 2020 1970 days 675 0
காலநிலை மற்றும் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச இராணுவ மன்றமானது (International Military Council on Climate and Security - IMCCS) மாறிவரும் காலநிலைப் பாதுகாப்பின் அபாயங்கள் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் பகுப்பாய்வு செய்வதற்காகவும் அவற்றிற்குத் தீர்வு காண்பதற்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள உலகெங்கிலும் உள்ள மூத்த இராணுவத் தலைவர்கள், பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவாகும்.
காலநிலை மாற்றத்தின் பாதுகாப்பு மற்றும் இராணுவ பரிமாணங்களுக்குத் தீர்வு காண்பதற்கான தகவல்களையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்து கொள்வதற்காக இராணுவ நிபுணர்களிடமிருந்து அதிகரித்து வரும் கோரிக்கைக்கு எதிர்வினையாற்றுவதற்காக IMCCSன் அறிமுகமானது 2019 ஆம் ஆண்டில் நெதர்லாந்தின் ஹேக்கில் அறிவிக்கப் பட்டது.
IMCCS ஆனது காலநிலை மற்றும் பாதுகாப்பு மையத்தால் நிர்வகிக்கப் படுகின்றது.
சமீபத்தில் உலகக் காலநிலை மற்றும் பாதுகாப்பு அறிக்கையானது IMCCS அமைப்பால் வெளியிடப் பட்டது.