காலநிலையால் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளின் கருத்தரங்கம்
December 12 , 2018 2439 days 790 0
முற்றிலும் இணையதளம் வாயிலாக நடைபெறுகின்ற காலநிலையால் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளின் (Climate Vulnerable Forum-CVF) முதலாவது கருத்தரங்கமானது மார்ஷெல் தீவுகளில் நடத்தப் பட்டது.
இது அரசின் தலைவர்கள் நிலையிலான அமைச்சர்கள் பங்கேற்கும் சர்வதேச அரசுகளுக்கிடையேயான ஒரு கூட்டமாகும்.
இது புவி வெப்பமயமாதலை அடிப்படையாகக் கொண்டது. மேலும் புவியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மேல் உயராமல் தக்க வைப்பதையும் இது இலக்காகக் கொண்டது.
காலநிலையால் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளின் இந்த கருத்தரங்கானது மாலத்தீவு அரசால் நிறுவப்பட்டது ஆகும். மேலும் இந்தியா இதன் பார்வையாளர் நாடுகளில் ஒன்றாகும்.