காலாண்டு வர்த்தக கண்காணிப்பு அறிக்கையின் Q3 பதிப்பு- 2025
July 20 , 2025 6 days 49 0
நிதி ஆயோக் அமைப்பானது, புது டெல்லியில் காலாண்டு வர்த்தகக் கண்காணிப்பு அறிக்கையின் மூன்றாவது பதிப்பைத் வெளியிட்டுள்ளது என்ற நிலையில் இது 2024–25 ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டை (2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை) உள்ளடக்கியது.
இந்தியாவின் சரக்கு ஏற்றுமதியானது சுமார் 3% அதிகரித்து 108.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், இறக்குமதியானது சுமார் 6.5% அதிகரித்து 187.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் உள்ளது.
சேவைகளின் ஏற்றுமதி 17% அதிகரித்து, 52.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சேவை உபரிக்குப் பங்களித்தது, இது வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுகட்ட உதவியது.
எண்ணிம முறையில் வழங்கப்படும் சேவைகளின் (DDS) ஏற்றுமதிகள் 2024 ஆம் ஆண்டில் 269 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியதுடன் இந்தப் பிரிவில் இந்தியா உலகளவில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.
மின்சார இயந்திரங்கள் மற்றும் ஆயுதங்கள் போன்ற மிக அதி உயர் தொழில்நுட்பப் பொருட்களின் ஏற்றுமதியானது 2014 ஆம் ஆண்டு முதல் 10.6% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளர்ந்துள்ளது.
விமானம், விண்கலம் மற்றும் அது தொடர்புடைய பாகங்கள் ஆண்டிற்கு சுமார் 200 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியுடன் முதல் பத்து ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.