TNPSC Thervupettagam

காலாண்டு வர்த்தகக் கண்காணிப்பு அறிக்கை

October 11 , 2025 13 hrs 0 min 4 0
  • நிதி ஆயோக் அமைப்பானது, 2024-25 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் இந்தியாவின் வர்த்தகத்தினை மதிப்பிடும் நான்காவது காலாண்டு வர்த்தக கண்காணிப்பு அறிக்கையை வெளியிட்டது.
  • இந்தியாவின் மொத்த வர்த்தகமானது 2024-25 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் ஆண்டிற்கு 2.2% வளர்ச்சியடைந்து, 441 பில்லியன் டாலரை எட்டியது.
  • இந்தியாவின் ஏற்றுமதியானது 25% வளர்ச்சியடைந்துள்ள நிலையில், ஏற்றுமதியில் 25% பங்களிப்புடன் வட அமெரிக்காவானது இந்தியாவின் மிகப்பெரியதான ஏற்றுமதி சந்தையாக இருந்தது; EU, GCC மற்றும் ASEAN ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதிகள் குறைந்தன.
  • விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை (CEPA) உடன்படிக்கையின் கீழ், தங்கத்தின் கொள்முதல் அதிகரித்ததால் ஐக்கிய அரபு அமீரகமானது ரஷ்யாவை விஞ்சி இந்தியாவின் இரண்டாவது பெரிய இறக்குமதி மூலமாக மாறியது.
  • மின்னணுத் தேவை காரணமாக சீனாவிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் அதிகரித்தன.
  • 296 பில்லியன் டாலர் மதிப்பிலான உலகளாவியச் சந்தையில் 1.8% பங்களிக்கின்ற இந்தியாவின் தோல் மற்றும் காலணித் தொழில்துறையானது 4.4 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்