தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர யாதவ் காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வின் முதல் காலாண்டுப் பகுதிக்கான (2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை) அறிக்கையினை வெளியிட்டார்.
இந்த அறிக்கையானது காலாண்டிற்கான அனைத்திந்திய ரீதியிலான நிறுவனம் சார்ந்த வேலைவாய்ப்பு ஆய்வின் ஓர் அங்கமாகும்.
இது தொழிலாளர் வாரியத்தினால் தயாரிக்கப்படுகிறது.
IT / BPO துறைகளில் 152 சதவீத வளர்ச்சியானது பதிவாகியுள்ளது.
மற்ற துறைகளில் வளர்ச்சி வீதம் ஆனது
சுகாதாரம் – 77%
கல்வி – 39%
தயாரிப்பு – 22%
போக்குவரத்து – 68% மற்றும்
கட்டுமானம் – 42% ஆகும்
வர்த்தகத்தில் வேலைவாய்ப்பானது 25% வரை குறைந்துள்ளது.
விடுதி & உணவகம் போன்ற துறைகளில் 13% வரை குறைந்துள்ளது.
நிதியியல் சேவைத் துறையின் வேலைவாய்ப்பு 48% உயர்ந்துள்ளது.