சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்திய அரசியல் வரைபடத்தில், ஜம்மு காஷ்மீர் (Jammu and Kashmir - J&K) மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பின்னர், காலாபாணி பிரதேசமானது இந்தியாவிற்கும் நேபாளத்துக்கும் இடையிலான மோதல் போக்கின் மையப் பகுதியாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவின் சமீபத்திய அரசியல் வரைபடத்தில், டர்ச்சுலா மாவட்டத்தில், நேபாளம் தனது சொந்தப் பிரதேசமாகக் கருதும் பிராந்தியத்தின் மீதான தனது உரிமைகளை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்த வரை, வரலாற்றுச் சிறப்புமிக்க காலாபாணி பகுதியானது உத்தராகண்ட் மாநிலத்தின் ஒரு பகுதியாகும்.
காலாபாணி பற்றி
காலாபாணி என்பது உத்தராகண்ட் மாநிலத்தின் பித்தோரகார்ஹ் மாவட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவினால் நிர்வகிக்கப்படும் ஒரு பள்ளத்தாக்குப் பகுதியாகும்.
இது கைலாஷ் மன்சரோவர் பாதையில் அமைந்துள்ளது.
காலாபாணி பிராந்தியத்தில் உள்ள காளி நதியானது இந்தியாவிற்கும் நேபாளத்துக்கும் இடையிலான எல்லைப் பகுதியைப் பிரிக்கின்றது.
1816 ஆம் ஆண்டில் நேபாள அரசாங்கம் மற்றும் பிரிட்டிஷ் இந்தியா ஆகியவற்றினால் (ஆங்கிலேய - நேபாள போருக்குப் பிறகு) கையெழுத்திடப்பட்ட சுகௌலி ஒப்பந்தமானது காளி நதியை இந்தியாவுடனான நேபாளத்தின் மேற்கு எல்லையாக வரையறுத்துள்ளது.