TNPSC Thervupettagam
November 3 , 2025 17 days 89 0
  • டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு பகுதியான தேசிய உயிரியல் அறிவியல் மையம் மற்றும் சர்வதேச தத்துவார்த்த அறிவியல் மையம் ஆகியவற்றால் காலிபர்/ CALIBRE மையம் நிறுவப்பட உள்ளது.
  • CALIBRE என்பது உயிரியல் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான செயற்கை கற்றல் மற்றும் நுண்ணறிவு மையம் (Centre for Artificial Learning and Intelligence for Biological Research and Education) என்பதைக் குறிக்கிறது.
  • உயிரியல் ஆராய்ச்சி, கல்வி மற்றும் புதுமைகளில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பதை இந்த மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அடிப்படை, பயன்பாட்டு மற்றும் மாறுநிலை உயிரியல் ஆராய்ச்சிக்கான மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகளை உருவாக்குவதற்கான உள்கட்டமைப்பை இது வழங்கும்.
  • CALIBRE ஆனது உயிரியல் ஆய்வுகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த இளம் இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சியை வழங்கும்.
  • செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த இந்த மையம் நரம்பியல் மண்டல அமைப்பினை ஒத்த, மூளையின் செயல்பாடுகளைக் கொண்டு வடிவமைக்கப் பட்ட கணினி அணுகுமுறைகளைப் பயன்படுத்தும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்