TNPSC Thervupettagam

காலியம் நைட்ரைடு MMIC தொழில்நுட்பம்

September 20 , 2026 5 hrs 0 min 33 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆனது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட காலியம் நைட்ரைடு ஒற்றை நுண்ணலை ஒருங்கிணைந்த மின்சுற்று (GaN MMIC) தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டியுள்ளது.
  • GaN MMIC என்பது உயர் அதிர்வெண் நுண்ணலை சமிக்ஞைகளைக் கையாளுவதற்கான ஒரு சிறிய சிப் (Chip) ஆகும் என்பதோடு இது எக்ஸ்-பேண்ட் (X-band) வரை செயல்படும்.
  • காலியம் நைட்ரைடு (GaN) அதிக ஆற்றல், சிறந்த ஆற்றல் திறன், வேகமான சமிக்ஞை செயலாக்கம் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெப்பச் செயல்பாட்டைக் கொண்டுள்ளது.
  • 3.5 × 3 மிமீ அளவிலான ஒரு GaN சிப்/சில்லு 30 வாட்ஸ் வரையிலான ஆற்றலை வழங்கும், இது ரேடார்கள், செயற்கைக்கோள்கள், உணர்விகள் மற்றும் எறிகணைகளில் பயனுள்ளதாக இருக்கும்.
  • DRDO இந்தத் தொழில்நுட்பத்தை 2024 ஆம் ஆண்டில் உருவாக்கியது, இதன் மூலம் உள்நாட்டு GaN MMIC தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள குறிப்பிட்ட சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்