TNPSC Thervupettagam

காலேஸ்வரம் திட்டம்

September 5 , 2025 17 days 53 0
  • தெலுங்கானாவின் காலேஸ்வரம் திட்டத் தடுப்பணைகள் குறித்து நீதிபதி P.C. கோஸ் ஆணையம் 665 பக்க அறிக்கையைச் சமர்ப்பித்தது.
  • மெடிகட்டா, அன்னாராம் மற்றும் சுண்டில்லா தடுப்பணைகள் தொடர்பான அனைத்து முடிவுகளும் 2014 முதல் 2016 ஆம் ஆண்டு வரை அப்போதைய முதல்வர் K. சந்திரசேகர் ராவால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.
  • நிர்வாக ஒப்புதல்கள் 2016 ஆம் ஆண்டு மார்ச் 01 ஆம் தேதியன்று வழங்கப்பட்டன, என்ற நிலையில் மத்திய நீர் ஆணையத்தின் (CWC) அனுமதி இல்லாமல் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப் பட்டன.
  • ஒப்புதல்கள் மற்றும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட பிறகு, 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மட்டுமே விரிவான திட்ட அறிக்கை CWC ஆணையத்திடம் சமர்ப்பிக்கப் பட்டது.
  • நீர் மற்றும் மின்சாரம் ஆலோசனை சேவைகள் (WAPCOS) மற்றும் நிபுணர்களால், நீர் ஊடுருவக் கூடிய மண் பற்றிய எச்சரிக்கைகள் இருந்த போதிலும், தடுப்பணைகள் கட்டப்பட்டு அணைகள் அல்லது நீர்த் தேக்கங்களாகப் பயன்படுத்தப்பட்டன.
  • கட்டுமான தாமதங்கள் மெடிகட்டாவிற்கு ஆறு, அன்னராமிற்கு ஐந்து, மற்றும் சுண்டில்லாவிற்கு எட்டு என பல நீட்டிப்புகளுக்கு வழிவகுத்தன.
  • தெலுங்கானாவில் உள்ள காலேஸ்வரம் திட்டம் முழுவதும் பரவலான நடைமுறை மற்றும் நிதி முறைகேடுகளை இருப்பதை இந்த ஆணையம் கண்டறிந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்